Map Graph

மாநகரத் தந்தை இராதாகிருஷ்ணன் வளைதடி பந்து விளையாட்டு அரங்கம்

மாநகரத் தந்தை இராதாகிருஷ்ணன் வளைதடி பந்து விளையாட்டு அரங்கம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள சென்னையில் உள்ள ஒரு வளைதடிப் பந்தாட்ட மைதானமாகும். இது சென்னை மாநகர மேனாள் தந்தை ம. இராதாகிருஷ்ணன் நினைவாகப் பெயரிடப்பட்டது. இங்கு 1996ஆம் ஆண்டு ஆண்கள் வாகையாளர் கோப்பைக்கான போட்டிகள் நடைபெற்றது. மேலும் திசம்பர் 2005-ல் போட்டியை மீண்டும் நடத்தியது. ஆசிய வளைதடி பந்தாட்ட வாகையாளர் போட்டி இடமாக 2007ஆம் ஆண்டும் இங்கு நடைபெற்றது. இதில் இந்தியா தென் கொரியாவை 7-2 என்ற வித்தியாசத்தில் வென்றது. இது சென்னை வளைத்தடி பந்தாட்ட சங்கத்தின் அனைத்து பிரிவு போட்டிகளுக்கும் மற்றும் உலக தொடர் வளைதடிப் பந்தாட்ட அணியான சென்னை சிறுத்தைகளின் சொந்த மைதானமாகவும் உள்ளது.

Read article
படிமம்:Mayor_Radhakrishnan_hockey_stadium.jpg